பூம்ரா ஏன் இலங்கை தொடரில் எடுக்கப்படவில்லை?- ரசிகர்கள் குழப்பம்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (15:37 IST)
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பூம்ரா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.

ஆசியக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூம்ரா முதுகுப் பகுதியில் காயமடைந்தார். அதனால் அவர் அணியில் இருந்து விலகினார். ஆனால் காயம் முழுவதுமாக குணமடைவதற்குள் அவர் மீண்டும் அணியில் அழைக்கப்பட்டார். அதனால் மீண்டும் காயமாகி அவர் இப்ப்போது உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

இதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர்  பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “நல்ல நேரங்கள் வர இருக்கின்றன” எனக் கூறியுள்ளார். இதனால் அவரை மீண்டும் அணியில் நாம் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை எழுந்தது.

ஆனால் இப்போது ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக நடக்க இருக்கும் ஒரு நாள் மற்றும் டி 20 தொடரில் பூம்ரா இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பூம்ராவின் உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்