157 கி மீ வேக சூறாவளி… உம்ரான் மாலிக்கின் அடுத்த சாதனை!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (09:30 IST)
சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணிக்காக விளையாடி வரும் உம்ரான் மாலிக் தனது அசுர வேக பவுலிங்கால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டே தனது அதிவேகப் பந்துகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் உம்ரான் மாலிக். இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் மெருகேறி பேட்ஸ்மேன்களை திணறவைத்து வருகிறார். நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதிலும் 4 விக்கெட்கள் க்ளீன் பவுல்ட்டாக அமைந்தன.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் அதிவேகப் பந்தை வீசிய சாதனையை அவர் தன்வசம் வைத்துள்ளார். தன்னுடைய முந்தைய சாதனையை நேற்றைய போட்டியில் தாண்டி 157 கி. மீ வேகத்தில் வீசி ஐபிஎல் தொடர்களிலேயே அதிக வேகத்தில் வீசிய இரண்டாவது பவுலர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்