வெறும் 57 இன்னிங்ஸ்களில் கோலியின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (09:08 IST)
கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இப்படி சொதப்புவதால், அவர் டி 20 போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உலகக் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் அவர் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது நடந்து வரும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா டி 20 தொடர்களில் கலக்கி வருகிறார். நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 போட்டியில் அவர் 56 பந்துகளில் சதமடித்து கலக்கினார். இந்த போட்டியில் அவர் 8 சிக்ஸர்களை விளாசினார்.

இந்நிலையில் சர்வதேச டி 20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கோலியை முந்தி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 57 இன்னிங்ஸ்களில் அவர் 118 சிக்ஸர்களை விளாசியுள்ளார். கோலி 107 இன்னிங்ஸ்களில் 117 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். முதல் இடத்தில் இருக்கும் ரோஹித் ஷர்மா 140 இன்னிங்ஸ்களில் 182 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்