இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

vinoth

செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (07:09 IST)
தற்போது நடைபெற்று வரும் 18 ஆவது ஐபிஎல் சீசனில் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்று புள்ளிப் பட்டியலில் பின் வரிசையில் இருந்த மும்பை இந்தியன்ஸ், நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை வென்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 116 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிரடியாக ஆடும் தன்மை கொண்ட கொல்கத்தா அணியை இவ்வளவு குறைவான ரன்களுக்குள் கட்டுப்படுத்த அந்த அணியின் அறிமுகப் பவுலர் அஸ்வனி குமாரின் அபாரமான பந்துவீச்சேக் காரணமாக அமைந்தது. அவர் 24 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அஸ்வனி குமார் மொத்தம் 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார். அவருக்கு இன்னுமொரு ஓவர் மீதமிருந்தும் அவருக்கு தொடர்ந்து ஓவர் கொடுக்காமல் பவுலரை மாற்றினார் ஹர்திக் பாண்ட்யா. இதனால் அவர் முதல் போட்டியிலேயே ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை இழந்தார். இது சம்மந்தமாக போட்டி முடிந்த பின்னர் ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்