களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

vinoth

செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (07:16 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் இருந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதற்கு அந்த அணி எப்போதுமே பேட்டிங், பவுலிங் என இரண்டு துறைகளிலும் ஒரு சமநிலையைப் பேணாததேக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் இந்த முறை ஐபிஎல் தொடரை மிகச்சிறப்பாக தொடங்கியுள்ளது பெங்களூரு. முதல் இரண்டு போட்டிகளில் கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற வலுவான அணிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்ட ஐபிஎல் அணி என்ற சாதனையை ஆர் சி பி பெற்றுள்ளது. 17.8 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ள அந்த அணிக்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.7 மில்லியன் பாலோயர்களோடு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்