ரோஹித் ஷர்மா கொஞ்சம் குண்டுதான்.. ஆனா அவர் ஃபிட்டாதான் இருக்கார்… பிசிசிஐ நிர்வாகி தகவல்!

செவ்வாய், 12 டிசம்பர் 2023 (06:52 IST)
சமீபத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்த நிலையில் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை நடக்க உள்ளது. இந்த அணிக்கு யார் கேப்டனாக பொறுப்பேற்க போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிகட்டத்தில் இருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு இது கடைசி தொடராக அமையலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் பிட்னெஸ் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்ட்ரெந்த் அண்ட் கண்டீஷனிங் பயிற்சியாளர் அன்கித் காலியார் பேசியுள்ளார். அதில் “ரோஹித் ஷர்மா கொஞ்சம் குண்டாக இருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அவர் கோலிக்கு நிகரான பிட்னெஸோடுதான் இருக்கிறார். அவர் எப்போதும் யோ யோ டெஸ்ட்களில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுகிறார்.  களத்தில் அவரின் சுறுசுறுப்பாகவும் மிகவும் வேகமாகவும் செயல்படுகிறார்.  அவர் பிட்டெஸ்ட் கிரிக்கெட்டர்களில் ஒருவராக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்