உலகக்கோப்பைக்கு போன இடத்தில் ரேப்? – இலங்கை அணி வீரர் கைது!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (09:00 IST)
உலகக்கோப்பை டி20 போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்ற இலங்கை அணி வீரர் அங்கு ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை டி20 போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இந்த போட்டிக்காக இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றது. இலங்கை அணி வீரரான தனுஷ்கா குணதிலகா இந்த போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் சமீபத்தில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

நேற்று சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. அதை தொடர்ந்து இலங்கை அணி சொந்த நாடு புறப்பட இருந்த நிலையில் தனுஷ்கா குணதிலகா சிட்னி நகர போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

டேட்டிங் ஆப் மூலம் இளம்பெண் ஒருவருடன் பழகிய தனுஷ்கா குணதிலகா அவரை ஒரு ஹோட்டலுக்கு வர சொல்லி சந்தித்ததாகவும், அப்போது அவரது விருப்பம் இல்லாமல் அவரை வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் குணதிலகா கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற இலங்கை அணியினர் நாடு திரும்பினர்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்