டி20 உலக்கோப்பை: இலங்கையின் தோல்வியால் தகர்ந்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை - தொடரும் வரலாறு

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (23:19 IST)
டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இலங்கை அணியின் தோல்வியால் தவறிப் போயிருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பு இலங்கைக்கும் கிடைக்கவில்லை. மாறாக இங்கிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்கிறது.
 
ஆஸ்திரேலிய அணி போட்டியில் இருந்து வெளியேறியது மூலம், போட்டியை நடத்தும் அணி டி20 உலகக் கோப்பையை வெல்லாது என்ற நிலை நீடிக்கிறது.
 
பலமான அணிகள் உள்ள குரூப்-1 பிரிவில் அதிக ரன்ரேட் கொண்டிருக்கும் நியூஸிலாந்து அணி ஏற்கெனவே அரையிறுதிப்போட்டிக்குச் சென்றுவிட்டது. இன்னொரு அணி எது என்று முடிவு செய்யும் ஆட்டம் இன்று நடந்தது.
 
இந்தப் போட்டியில் மோதிய இலங்கை அணிக்கு இந்தப் போட்டியில் வென்றாலும் தோற்றாலும் அரையிறுதிக்குச் செல்ல முடியாத நிலைதான். ஆனால் இங்கிலாந்து அணிக்கு இது வாழ்வா சாவா போராட்டம். போட்டியில் தோற்றால் போட்டியைவிட்டு வெளியேறிவிட வேண்டியதுதான் என்ற நிலை.
 
இரு அணி வீரர்களிடம் இருந்த வெற்றிக்கான வேட்கையின் அளவில் இருந்து வேறுபாட்டை இந்தப் போட்டியில் காண முடிந்தது. இங்கிலாந்து அணிக்கு மட்டுமே வெற்றி தேவையாக இருந்தது. அதுவே அந்த அணிக்குச் சாதகமாகவும் அமைந்தது.

 
இங்கிலாந்து எப்படி அரையிறுதிக்கு முன்னேறியது?
 
குரூப் 2 பிரிவில் அனைத்துப் போட்டிகளும் முடிவடைந்த நிலையில், நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளுமே 7 புள்ளிகளைப் பெற்றுள்ளன. மூன்று அணிகளும் மூன்று போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியும் பெற்றிருக்கின்றன.

 
வேதனையை சாதனைகளாக மாற்றிய விராட் கோலி - மறுபிறவி எடுத்தது எப்படி?
 
இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டம் பற்றி சுந்தர் பிச்சை ட்விட்டர் பதிவு
ஆனால் நியூஸிலாந்தும், இங்கிலாந்தும் மட்டுமே அரையிறுதிக்குச் செல்கின்றன. அதற்குக் காரணம் ரன் ரேட். நியூஸிலாந்து அணி 2.113 ரன்ரேட்டை கொண்டிருக்கிறது. இங்கிலாந்து அணி 0.473 ரன்ரேட்டையும், ஆஸ்திரேலிய அணி மைனஸ் 0.173 ரன் ரேட்டையும் பெற்றிருக்கின்றன. ஆஸ்திரேலிய அணியை விட கூடுதலாக ரன்ரேட்டைப் பெற்றிருப்பதால் நியூஸிலாந்தும் இங்கிலாந்தும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கின்றன.

 
ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் குறைந்ததற்கு முக்கியமான காரணம் அந்த அணி நியூஸிலாந்து அணியுடன் மோதிய போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதுவே நியூஸிலாந்து அணி அதிக ரன்ரேட் பெற்றதற்கும் காரணமானது. இதுதவிர இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராகவும் நியூஸிலாந்து அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
 
 
பலமான நியூஸிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, பலம் குறைந்ததாகக் கருதப்படும் அயர்லாந்து அணியிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய நேர்ந்தது. மழையால் ஆட்டங்கள் ரத்தானதும், தடைபட்டதும்கூட புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தின.
 
போட்டியில் என்ன நடந்தது?
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. முதல் ஓவரிலேயே சிக்சருடன் கணக்கைத் தொடங்கிய அந்த அணியின் நிசாங்காவும் மெண்டிஸும் அதிரடியாக ஆடினர். ஆனால் 4-ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். இதன் பிறகு நிசாங்கா அதிரடியைத் தொடர்ந்தார். ஆயினும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சில ஓவர்களில் கட்டுப்பாடாகவே ரன்களைக் கொடுத்தனர்.
 
9-ஆவது ஓவரில் தனஞ்செயா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எல்லைக் கோட்டுக்கு அருகே தலைக்கு மேலே வந்த பந்தை அற்புதமாகப் பிடித்தார் பென் ஸ்டோக்ஸ். அதன் பிறகு இலங்கையின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. 11-ஆவது ஓவரில் அசலங்கா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
 
 
காணொளிக் குறிப்பு,
 
டி20 உலக்கோப்பை: பாகிஸ்தான் வெற்றி பெறுவதால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்?
 
எனினும் மறுமுனையில் பொறுப்பாக ஆடி வந்த நிசாங்கா அரை சதம் அடித்தார். 67 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத்தின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.
 
20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
 
குறைந்த இலக்காக இருந்தாலும் இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கியது. பவர்பிளே ஓவர்களில் 70 ரன்களைக் குவித்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரரான பட்லர் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10-ஆவது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹேல்ஸ் 47 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 86 ரன்கள் எடுத்திருந்தது.
 
 
அந்த நேரத்தில் மிக எளிமையாக இங்கிலாந்து அணி வென்றுவிடும் என்றே கருதப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
 
கடைசி நேரப் பதற்றம்
 
மிகவும் மெதுவாகவே ரன் எடுக்கத் தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது. 15 ஓவர் முடிவில் 113 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது அந்த அணி. அதன் பிறகு 30 பந்துகளுக்கு 29 ரன்களை அந்த அணி எடுக்க வேண்டியிருந்தது.
 
ஒரு கட்டத்தில் 15 ரன்களுக்கு 15 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. 18-ஆவது ஓவரின் இறுதியில் சாம் கரன் ஆட்டமிழந்தபோது கடைசி 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்றானது. அப்போது பெவிலியனில் இருந்து இங்கிலாந்து வீரர்களிடையே பதற்றைக் காண முடிந்தது.
 
இருப்பினும் ஒன்றும் இரண்டுமாகத் தட்டி எடுத்து, அந்த அணி ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையிலேயே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
சூப்பர் ஞாயிற்றுக்கிழமை
 
ஞாயிற்றுக்கிழமையன்று குரூப்-2 பிரிவில் மூன்று போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிக்க இருக்கின்றன. பி பிரிவின் 6 அணிகளுக்குமே இவை தங்களது கடைசிப் போட்டிகளாக இருக்கும். வெற்றி தோல்விகள் மாத்திரமல்லாமல் மழையால் ஆட்டங்கள் ரத்தாவதும்கூட அணிகளின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்