கொரோனாவால் நிதி நெருக்கடியில் கிரிக்கெட் வாரியம்! அதனால் எடுத்த முடிவு!

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2020 (08:48 IST)
கொரோனா பாதிப்பால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்காததால் நிதி நெருக்கடியில் இருக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம் பிரிமியர் லீக் போட்டிகளை நடத்த உள்ளது.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளில் பல ஆண்டுகளாக கவுண்ட்டி மற்றும் பிக்பாஷ் போன்ற போட்டிகள் நடந்து வந்தாலும் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் ஐபிஎல் தொடர் உலக அளவில் கவனம் ஈர்ப்பதாகவும், வீரர்களுக்கு வருவாய் கொட்டும் தொடராகவும் அமைந்தது. இதையடுத்து பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளும் தங்கள் நாட்டில் லீக் தொடரை நடத்த ஆரம்பித்தன.

இந்நிலையில் இப்போது கொரோனா காரணமாக சர்வதேசப் போட்டிகள் எதுவும் நடக்காத்தால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிகிறது. இதனால் இலங்கை பிரிமீயர் லீக் என்ற தொடரை நடத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு 2012 ஆம் ஆண்டு மட்டும் இதுபோல ஒரு தொடரை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐபிஎல் போல அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் ஒரே ஆண்டுடன் நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்