இதைச் சொல்ல ஒரு முதல்வர் எதற்கு? உதயநிதி ஸ்டாலின் கேள்வி..
சனி, 20 ஜூன் 2020 (23:18 IST)
கொரோனா வைரஸ் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் அவர் கூறும்போது, கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில், இதுக்குமேல எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பான்’ – பக்தர்கள் சொல்லும் கடைசி வார்த்தைகள் இவை. ஆனால் இதைச் சொல்ல ஒரு முதல்வர் எதற்கு? உங்களின் இயலாமையால் எத்தனையெத்தனை மரணங்கள். கடவுள் உங்களைப் பார்த்துக்கொள்ளமாட்டான் @CMOTamilNadu அவர்களே, இருந்தால் உங்களை தண்டிப்பான் #SaveChennai என்று பதிவிட்டுள்ளார்.