தேஷ்பாண்டே அபார பவுலிங்... சரணடைந்த ஐதராபாத் பேட்ஸ்மேன்கள்... சி எஸ் கே அணிக்கு பிரம்மாண்ட வெற்றி!

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2024 (07:00 IST)
நேற்று நடந்த இரண்டாவது ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் சேர்த்தது.

சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ருத்துராஜ் அதிகபட்சமாக 98 ரன்கள் சேர்த்தார். இந்த சீசன் முழுவதும் சொதப்பி வந்த 32 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 2 பந்துகளில் 5 ரன்கள் சேர்த்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார்.

இதன் பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் அணி ஆரம்பம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்களை இழந்தது. வழக்கமாக காட்டடி ஆட்டத்தை ஆடும் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் சி எஸ் கே பவுலர்களிடம் சரணடைந்தனர். இதனால் அந்த அணி 18.5  ஓவர்கள் முடிவில் 132 ரன்கள் மட்டுமே அனைத்து விக்கெட்களையும் இழந்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னை அணி சார்பில் துஷார் தேஷ்பாண்டே நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்