டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த முடிவு… கம்பேக் கொடுத்த மேக்ஸ்வெல்… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (15:04 IST)
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் 7 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. மற்ற அணிகள் ப்ளே ஆஃப்க்கு செல்ல இனிவரும் ஒவ்வொரு போட்டிகளையும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்நிலையில் இன்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியும் ஏழாவது இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத் மைதானத்தில் பலப் பரீட்சை நடத்துகின்றன. சற்றுமுன்னர் இந்த போட்டிக்கான டாஸ் வீசப்பட்ட நிலையில் டாஸை வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அந்த அணியில் சில போட்டிகளாக விளையாடாமல் இருந்த மேக்ஸ்வெல் அணிக்குள் திரும்பியுள்ளார்.

பெங்களூரு அணி விவரம்
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(c), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக்(w), ஸ்வப்னில் சிங், கர்ண் சர்மா, முகமது சிராஜ், யாஷ் தயாள்

குஜராத் அணி விவரம்
விருத்திமான் சாஹா(w), சுப்மான் கில்(c), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோகித் சர்மா

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்