IPL 2023: ஹோம் க்ரவுண்டில் வைத்து டெல்லியை முடித்த சன்ரைஸர்ஸ்!

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (08:37 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைஸர்ஸ் அணியும் மோதிக் கொண்ட போட்டி எதிர்பாராத பரபரப்பு வெற்றியை சன்ரைஸர்ஸ்க்கு அளித்துள்ளது.

நேற்று நடந்த ஐபில் லீக் போட்டியில் மாலை நேர போட்டியில் சன்ரைஸர்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதிக் கொண்டன. புள்ளி பட்டியலில் இறுதி இரண்டு இடங்களில் உள்ள அணிகள் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமலே இருந்தது. முதலில் களமிறங்கிய ஹைதரபாத் அணியின் அபிஷேக் சர்மாவின் 12 பவுண்டரிகள் போட்டியை நோக்கிய விறுவிறுப்பை ஏற்படுத்த தொடங்கியது.

ஆனால் அடுத்தடுத்து களம் இறங்கிய சன்ரைஸர்ஸ் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். கடைசியில் களமிறங்கிய க்ளாசன் (53), அப்துல் சாமத் (28) ரன்கள் சேர்த்த நிலையில் அணியின் ஸ்கோர் 197 ஆனது. இந்த இலக்கை எட்டுவதற்காக களமிறங்கிய டிசியை ஆரம்பமே சன்ரைஸர்ஸ் பதம் பார்த்தது.

டேவிட் வார்னர் ரன் எடுக்காமலே அவுட் ஆனாலும், பில் சால்ட் (59), மிட்ஷல் மார்ஷ் (63) ரன்கள் சேர்த்து ஆட்டத்தை முன் நகர்த்தினர். ஆனால் அடுத்தடுத்து விளையாட வந்த டெல்லி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் டெல்லி அணி 188 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட் ஆனது.

கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை அதன் ஹோம் க்ரவுண்டிலேயே டெல்லி அணி வீழ்த்திய நிலையில், அதற்கு பதிலடியாக டெல்லியை அதன் ஹோம் க்ரவுண்டில் வீழ்த்தியுள்ளது சன்ரைஸர்ஸ் அணி.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்