இன்னுமா சுழல்பந்து ஆடுகளத்தை நம்பிக்கொண்டிருக்கிறோம்… பிசிசிஐக்கு கங்குலி வைத்த கோரிக்கை!

vinoth
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (12:04 IST)
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்களும்,  இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களும் எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி பெற 398 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 292 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த இரண்டு போட்டிகளிலும் ஆடுகளங்கள் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டன. இதனால் இரு அணிகளும் அதிகளவில் சுழல்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினர். இந்திய அணியில் பும்ராவும், இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் மட்டுமே வேகப்பந்து வீச்சில் கணிசமான விக்கெட்களை வீழ்த்தினர். மற்ற விக்கெட்களை எல்லாம் சுழல்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர்.

இதுபற்றி பேசியுள்ள கங்குலி “இன்னும் நாம் ஏன் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்க வேண்டும் என தெரியவில்லை. பும்ரா, சமி, சிராஜ், முகேஷ் குமார் ஆகியோர் பந்து வீசுவதை நான் பார்க்கிறேனோ! அப்போதெல்லாம் இன்னுமா நமக்கு சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம் தேவை என்று கேள்வி எழுகிறது. எந்த ஆடுகளத்தைக் கொடுத்தாலும் நம்மால் 20 விக்கெட்களையும் வீழ்த்த முடிய்ம். அதிலும் அஸ்வின், ஜடேஜா, குல்தீப், அக்சர் பட்டேல் ஆகியோர் நம் வேகப்பந்து வீச்சாளர்களோடு இணைந்தால் விக்கெட் வேட்டையே நடக்கும். நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டியது நம் பேட்டிங்கில்தான்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்