முதலில் பேட் செய்த ஆர் சி பி அணியில் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் தடுமாறி ஆட்டமிழக்க ஒரு கட்டத்த்தில் அந்த அணி 100 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது. ஆனால் பின் வரிசையில் லிவிங்ஸ்டன் மற்றும் டிம் டேவிட் ஆகியோரின் அதிரடியால் கௌரவமான ஸ்கோராக 169 ரன்கள் சேர்த்தது. ஆனால் அந்த இலக்கை இரண்டே விக்கெட்களை இழந்து குஜராத் எளிதாக வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைத் தட்டி சென்றார். ஐபிஎல் தொடரில் 7 ஆண்டுகள் பெங்களூர் அணிக்காக ஆடிய சிராஜ், முதல் முறையாக குஜராத் அணிக்காக தன்னுடைய தாய் அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். இதுபற்றி பேசிய அவர் “நான் போட்டித் தொடங்கும் முன்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருந்தேன். ஏனென்றால் நான் இங்கு 7 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். ஆனால் பந்தைக் கையில் எடுத்ததும் எல்லாம் காணாமல் போய்விட்டது” எனக் கூறியுள்ளார்.