600 ரன் டார்கெட் வெச்சாலும் அடிப்போம்! – ஜேம்ஸ் ஆண்டர்சனின் அபார நம்பிக்கை!

Prasanth Karthick

திங்கள், 5 பிப்ரவரி 2024 (09:13 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா ஏறுமுகத்தில் உள்ள நிலையில் இந்தியாவின் இலக்கை குறைந்த ஓவரில் சேஸ் செய்வோம் என இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.



இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 255 ரன்களை குவித்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு இன்னும் 332 ரன்கள் தேவை. 9 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ளது.

ALSO READ: மூன்றாவது டெஸ்ட்டிலும் கோலி இருக்க மாட்டாரா?

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் “இந்தியா 600 ரன்கள் டார்கெட் வைத்தாலும் நாம் அதை சேஸ் செய்ய வேண்டும் என எங்கள் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் கூறினார். அது எங்களுக்கு உணர்த்தியது ஒன்றுதான். என்ன ஆனாலும் டார்கெட்டை தொட முயற்சிப்போம். இன்னும் 180 ஓவர்கள் மீதம் உள்ளது என்றாலும் நாங்கள் 60 முதல் 70 ஓவர்களில் இலக்கை அடைய முயற்சிப்போம். வெற்றியோ, தோல்வியோ எங்கள் வழியில் நாங்கள் விளையாடுவோம்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்