இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளையும் வென்று தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து நாளை இரு அணிகளும் மோதும் டி 20 தொடர் நடக்கவுள்ளது.
இந்த தொடருக்காக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் நிதிஷ்குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா மற்றும் ரியான் பராக் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ருத்துராஜ் மற்றும் சஹால் போன்றவர்கள் அணியில் இடம்பெறவில்லை. அதே போல தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அணியில் இடம்பெற்றிருந்த ஷிவம் துபே காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலக, அவருக்கு மாற்று வீரராக திலக் வர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.