ஓவர் கான்பிடன்ஸ் இருந்தா இப்படிதான் நடக்கும்.. இந்திய அணியை விமர்சித்த ஷாகித் அப்ரிடி!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (13:43 IST)
உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி கடைசியில் இறுதிப் போட்டியில் மட்டும் தோற்று இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதன் பின்னர் விளையாடிய ஆஸி அணி 241 ரன்கள் சேர்த்து ஆறாவது முறையாக உலகக் கோப்பை தொடரை வென்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார்.

இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி “ தொடர்ந்து எல்லா போட்டிகளையும் வென்றால் வீரர்களுக்கு அதிகப்படியான தன்னம்பிக்கை ஏற்படும். அதுவே வீழ்ச்சிக்கு துவக்கமாக இருக்கும். இந்திய அணி ரசிகர்கள் எதிரணி வீரர்கள் சிறப்பாக விளையாடும் போது பாராட்டுவதில்லை. டிராவிஸ் ஹெட் சதமடித்த போது அவர்கள் எழுந்து நின்று கைதட்டவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்