விசா பிரச்சனை எல்லாம் முடிந்து ஐதராபாத் வந்து சேர்ந்த பாகிஸ்தான் அணியினர்!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (08:28 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்த முறை முழு உலகக் கோப்பை தொடரும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடக்கின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் கலந்துகொள்ளும் அணிகளில் பாகிஸ்தான் தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இந்தியாவுக்கு வர விசா வழங்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அணியினருக்கு விசா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டது.

அதையடுத்து பாகிஸ்தானில் இருந்து துபாய் சென்ற பாகிஸ்தான் அணியினர், அங்கிருந்து நேரடியாக ஹைதராபாத்துக்கு விமான நிலையம் மூலமாக வந்தடைந்துள்ளனர். அங்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து வரவேற்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்