மூன்றாவது ஒருநாள் போட்டி… ஆஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் வெற்றி!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (07:20 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அதிரடியாக ஆடி 352 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

இந்திய அணியில் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதன் பிறகு பேட்டிங் ஆடவந்த இந்திய அணியும் அதிரடியாக பேட்டிங்கை தொடங்கியது. கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கோலி 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் சீரான இடைவெளிகளில் விக்கெட்கள் விழ, இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியில் தோற்றது. சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்திய மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகவும், ஷுப்மன் கில் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்