இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் வீரர் மார்க் டெய்லர் பேசும்போது “ரோஹித் ஷர்மா அணியில் இருந்து விலகவில்லை. அவர் நீக்கப்பட்டுள்ளார். ஏனென்றால் ஒரு தொடரின் இறுதிப் போட்டியில் அதுவும் முக்கியமான போட்டியில் கேப்டன் விலகமாட்டார். ஆனால் அவரை நீக்கியதை ஏன் இவர்கள் பேசமாட்டேன் என்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர் ஒட்டுமொத்தமாக அணியில் இருந்து விலக்கப்படவில்லை. இந்த போட்டியில் இருந்து மட்டும்தான் நீக்கப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளார்.