மும்பையை கலக்கும் சச்சினின் பிரம்மாண்ட ரங்கோலி

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (16:03 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின்  டெண்டுல்கரின் பிறந்தநாளை மும்பை இளைஞர் ஒருவர் பிரம்மாண்ட ரங்கோலி வரைந்து கொண்டாடியுள்ளார். 


 

 
கிரிக்கெட் உலகின் சிறந்த வீரர்களின் ஒருவரான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
 
நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையைச் சேந்த அபிஷாக் சட்ணம் என்ற இளைஞர் பிரம்மாண்டமான அவரது உருவத்தை கோலமாக வரைந்துள்ளார்.
 
இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளர். அதில் அவர் கூறியதாவது:-
 
சச்சின் டெண்டுல்கர் எனது இலட்சிய மனிதர். நான் அவரது பிறந்தநாளன்று ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டுமென நினைத்தேன். அதான் இந்த பிரம்மாண்ட ரங்கோலியை வரைந்தேன். இதை 20 மணி நேரத்தில் வரைந்து முடித்தேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்