முதல் முறையாக பாகிஸ்தான் உலகக் கோப்பையில் இந்தியாவை வெல்லும்… இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கணிப்பு!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (10:44 IST)
உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி (நேற்று) தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருப்பது அக்டோபர் 15 ஆம் தேதி நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டியைதான்.

இதுவரை 7 முறை ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளன இரு அணிகளும். ஆனால் அதில் ஒரு முறை கூட பாகிஸ்தான் அணி வென்றதேயில்லை. இந்நிலையில் இந்தமுறை பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆர்தர்டன் கணித்துள்ளார்.

"எனது கணிப்பின்படி, 50 ஓவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் முதல் முறையாக இந்தியாவை இந்தமுறை வெல்லும் என்று நான் கூறுகிறேன். இரு அணிகளும் மோதும் போட்டி இந்த தொடரின் மிகப்பெரிய விளையாட்டாக இருக்கும். இந்த போட்டி இது ஒரு நிரம்பிய மைதான போட்டியாக இருக்கும் என்பது உறுதி. இந்தமுறை பாகிஸ்தான் அணி ஆச்சர்யமளிக்கும் என எதிர்பார்க்கிறேன்" என்று ஏதர்டன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்