யோவ் மிலிட்ரி.. நீ எங்கய்யா இங்க? – கிரிக்கெட் க்ரவுண்டுக்குள் நுழைந்த ஜார்வோ!

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (16:01 IST)
இன்று சென்னையில் நடந்து வரும் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியின் இடையே கிரிக்கெட் ரசிகர் ஜார்வோ மைதானத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தியாவின் 9 மைதானங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகளின் நான்காவது போட்டியான இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியாவை பந்து வீச்சில் இந்தியா கட்டுப்படுத்தி வருகிறது. இதற்கிடையே ப்ரேக் டைம் நேரத்தில் பிரபல கிரிக்கெட் ரசிகர் ஜார்வோ தனது வழக்கமான 69 எண் ஜெர்சியுடன் மைதானத்திற்குள் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நேராக கோலியிடம் ஓடிய அவரிடம் சில வார்த்தைகள் கோலி பேசிய நிலையில், அங்கு வந்த மைதான காவலர்கள் அவரை வெளியேற்றினர்.

பிரபல கிரிக்கெட் ரசிகரும், ப்ராங்க்ஸ்டருமான ஜார்வோ என்று அழைக்கப்படும் டேனியல் ஜார்விஸ் இதுபோல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மைதானங்களுக்குள் புகுந்து வைரலானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்