ராகுல் + சச்சின் = ரச்சின்! நியூஸிலாந்து கிரிக்கெட்டில் கலக்கும் இந்திய வம்சாவளி!

வெள்ளி, 6 அக்டோபர் 2023 (08:48 IST)
நேற்று நடந்த ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணியின் மிக முக்கியமான வீரராக இருந்தவர் ரச்சின் ரவீந்திரா. இவர் ஒரு இந்திய வம்சாவளி என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா.



நேற்று தொடங்கிய உலக கோப்பையின் முதல் போட்டியில் நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் மோதிக் கொண்டன. இதில் இங்கிலாந்து அணியை 282 ரன்களில் மடக்கிய நிலையில் நியூஸிலாந்து அணி 36 ஓவரிலேயே 283 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றியது.

நியூசிலாந்து அணிக்காக அதிகபட்சமாக டெவன் கான்வே 152 ரன்களையும் ரச்சின் ரவிந்திரா 123 ரன்களையும் குவித்துள்ளார். நியூசிலாந்து அணியில் ரவீந்திரா என்ற இந்திய பெயர் கொண்டு ஒருவரு இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆனால் ரச்சு ரவீந்திரா இந்தியாவை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர்தான்.

ரச்சின் ரவீந்திராவின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். மென்பொருள் பொறியாளரான ரவி கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டிலும் ஆர்வம் உடையவராக இருந்தார். பணி நிமித்தமாக நியூசிலாந்தில் செட்டிலான ரவி கிருஷ்ணமூர்த்திக்கு நியூசிலாந்தில் தான் குழந்தை பிறந்தது. தனது கிரிக்கெட் ஆதர்சங்கள் ஆன ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் நினைவாக இருவரது பெயரையும் சேர்த்து ரச்சின் ரவீந்திரா என்ற பெயரை அவர் குழந்தைக்கு வைத்தார்.

இன்று அவர்களது புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் ரச்சு ரவீந்திரா கலக்கி வருகிறார். தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலேயே சதத்தை வீழ்த்தி தனது அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்