கபில்தேவ் சாதனையை 36 வருடங்களுக்கு பின் உடைத்த ஜடேஜா!

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (17:40 IST)
கபில்தேவ் சாதனையை 36 வருடங்களுக்கு பின் உடைத்த ஜடேஜா!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் சாதனையை ஜடேஜா முப்பத்தி ஆறு வருடங்களுக்கு பின் உடைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தற்போது இலங்கைக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது என்பதும் ஜடேஜா 175 ரன்கள் எடுத்திருந்தார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் கடந்த 1986ஆம் ஆண்டு கபில்தேவ் 7 ஆவது வீரராக களமிறங்கி 163 ரன்கள் எடுத்ததே இந்திய வீரரின் சாதனையாக இருந்தது. இந்த நிலையில் மொகாலி டெஸ்டில் அதே ஏழாவது வீரராக களமிறங்கிய ஜடேஜா 175 ரன்கள் எடுத்ததன் மூலம் கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார் 
 
இந்த சாதனை பட்டியலில் ரிஷப் பண்ட் 159 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பதும் 144 ரன்கள் எடுத்து தோனி 4-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்