யாருக்கும் நான் போட்டி இல்லை… இஷான் கிஷான் பதில்!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:48 IST)
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இஷான் கிஷான் 130 பந்துகளில் 210 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் அதில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும். அவர் 126 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தார். இதுவரை அடிக்கப்பட்ட இரட்டை சதங்களிலெயே  இதுதான் அதிவேக சதம். அதுமட்டுமில்லாமல் இஷான் கிஷான் தன்னுடைய முதல் சர்வதேச சததத்தையே இரட்டை சதமாக மாற்றிய பெருமை இஷான் கிஷானையே சேரும்.

இதனால் இனிமேல் இந்திய அணியில் இவர் பெயரையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடத்தில் இந்திய அணியில் ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூன்று திறமையாளர்கள் ரேஸில் உள்ளனர்.

இதுபற்றி பேசியுள்ள இஷான் “ நாங்கள் இதை போட்டியாக கருதவில்லை. மூன்று பேருமே நாட்டிற்காக விளையாடுகிறோம்.ஒருவருக்கு ஒருவர் தேவையான அறிவுரைகளை பேசிக் கொள்கிறோம். மூவருமே அவரவர் ஆட்டத்தில் கவனம் செலுத்துகிறோம். நான் யாருக்குமே போட்டி கிடையாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்