ட்ராவிஸ் ஹெட்டுக்கு செம க்ராக்கி! ஸ்மித்தை கண்டுக்கல! – பரபரக்கும் ஐபிஎல் மினி ஏலம்!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (13:54 IST)
2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் முக்கிய வீரர்களை வாங்க அணிக்குள் போட்டி நிலவி வருகிறது.



2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் வீரர்கள் மினி ஏலம் இன்று நடைபெறுகிறது. ஐபிஎல்லின் 10 அணிகளும் கலந்து கொள்ளும் இந்த மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் மீதான ஏலம் நடந்து வருகிறது.

இதில் முதலாவதாக ஏலத்தில் வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் பவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. அடுத்ததாக இங்கிலாந்தின் இளம் வீரர்களில் ஒருவரான ஹாரி ப்ரூக்ஸ் அடிப்படை விலை 2 கோடி என இறங்கிய நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை 4 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

அதற்கடுத்ததாக பிரபல ஆஸ்திரேலிய வீரரான, முடிந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணியாக இருந்த ட்ராவிஸ் ஹெட் மீது அடிப்படை விலை ரூ2 கோடியில் ஏலம் தொடங்கிய நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6.8 கோடிக்கு அவரை வாங்கியுள்ளது. ஆனால் மற்றொரு பிரபல ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் மீது 2 கோடி அடிப்படை விலையில் ஏலம் தொடங்கிய நிலையில் எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்