ஒரு நாள் போட்டி - நியூசிலாந்து அணிக்கு 281 ரன்கள் இலக்கு

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (17:17 IST)
நியுசிலாந்து அணிக்கு எதிராக இன்று இந்தியா ஆடிய ஒரு நாள் போட்டியில்  8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் குவித்துள்ளது.


 

 
இந்தியா - நியுசிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.
 
மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்திள் விளையாடுவதற்காக வில்லியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்துள்ளது.
 
அந்நிலையில், டாஸை வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதில், இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி 280 ரன்கள் குவித்தனர். அணியின் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 121 ரன்கள் எடுத்தார். 
 
முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 280 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடும் நியுசிலாந்து அணிக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்