நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி அணியை வெற்றிபெற செய்த அஷுதோஷ் சர்மா, அந்த பெருமையை தனது குருவுக்கு சமர்பிக்கிறார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை குவித்திருந்தது.
அதை தொடர்ந்து 210 ரன்கள் என்ற இலக்கை அடைய களம் இறங்கிய டெல்லி அணி ஆரம்பமே சறுக்கல்களை சந்தித்தது. வெறும் 7 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி தோற்றுவிடும் என்றே பலரும் நினைத்தனர். மிடில் ஆர்டரில் வந்த ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடி நம்பிக்கை ஏற்படுத்திய நிலையில் 34 ரன்களில் திடீரென அவுட் ஆனார். இம்பேக்ட் ப்ளேயராக வந்த அஷுதோஷ் சர்மா எந்த இம்பேக்ட்டும் இல்லாமல் 20 பந்துகளுக்கு 20 ரன்கள் என்ற கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தார்.
டெல்லி அவ்வளவுதான் என எல்லாரும் நினைத்த கணத்தில் திடீரென அதிரடியில் இறங்கிய அஷுதோஷ் சர்மா, விக்கெட் இழக்காமல் தொடர்ந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை சேர்க்க தொடங்கினார். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றத் தொடங்கியது. 20 பந்துக்கு 20 ரன் என்று இருந்தவர் அடுத்த 11 பந்துகளில் 46 ரன்களை அடித்து குவித்து மொத்தம் 66 ரன்களை குவித்ததுடன், அணியையும் வெற்றி பெற செய்தார்.
இதன்மூலம் நேற்றைய போட்டிக்கான மேன் ஆப் தி மேட்ச் விருதையும் அஷுதோஷ் சர்மா வென்றுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சியுடன் பேசிய அஷுதோஷ் சர்மா, இந்த மேன் ஆப்தி மேட்ச் விருதை தனது மெண்டோர் ஷிகார் தவானுக்கு சமர்ப்பணம் செய்வதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷிகார் தவான் இந்திய அணிக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடினார். ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியதுடன், கேப்டனாகவும் அணியை வழிநடத்தியவர். அவர்தான் அஷுதோஷ் சர்மாவின் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். இந்த போட்டியில் அஷுதோஷ் வென்றதும் ட்ரெஸ்ஸிங் ரூம் சென்று ஷிகார் தவானிடம் வீடியோ கால் செய்து பேசி வாழ்த்துகள் பெற்றார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Edit by Prasanth.K
Ashu ???? Gabbar
— Delhi Capitals (@DelhiCapitals) March 24, 2025
Its a Dilli love story ????❤️ pic.twitter.com/HZkeC3sWUE