தோனிக்கு கோலிக்கும் மத்தியில் என்ன?? கங்குலி விளக்கம்!!

சனி, 21 அக்டோபர் 2017 (17:50 IST)
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய பிறகு கோலி அந்த பொறுப்பை ஏற்றார். ஆனாலும் தோனி சில் சமயங்களில் களத்தில் கேப்டனாகவே செயல்படுகிறார்.


 
 
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி பின்வருமாறு கூறினார், தோனி இந்திய அணியில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கோலி விரும்புகிறார். தற்போது அவருக்கு 36 வயதாகிறது. 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய தோனியாக அவர் இல்லை. 
 
தற்போது மாறுபட்ட வீரராக உள்ளார். டோனியை கோலி வெறும் விக்கெட் கீப்பராக மட்டும் பார்க்கவில்லை. கேப்டன் பதவிக்கான அனைத்து தகுதியில் உள்ள தோனியிடம் சிறந்த அறிவுரைகளை பெறுகிறார் என கூறியுள்ளார்.
 
மேலும், அதேபோல் தோனிக்கு விராட் கோலி ஆதரவாக உள்ளார். தோனியால் 2019 உலகக்கோப்பை தொடர் வரை விளையாட முடியும் என்று நினைக்கிறேன். கோலி அவருக்கு பக்க பலமாக இருக்கிறார் என்பது தோனிக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்