ஸ்ரீசாந்த் எந்த நாட்டிற்காகவும் விளையாட முடியாது - பிசிசிஐ அதிரடி

சனி, 21 அக்டோபர் 2017 (13:11 IST)
ஸ்ரீசாந்த் எந்த நாட்டிற்காகவும் விளையாட முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவித்துள்ளது.


 

 
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மேட்ச் பிச்சில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால் ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் வாரியம்) வாழ்நாள் தடைவிதித்தது. 
 
சமீபத்தில் உயர் நீதிமன்றமும் ஸ்ரீசாந்த மீதான தடை பிசிசிஐ முடிவு. இதில் உயர்நீதிமன்றத்தால் குறுக்கிட இயலாது என்று கூறியது. இந்நிலையில், 
 
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீசாந்த், இந்திய கிரிக்கெட்டில் விளையாட கூடாது என்றால் வெளிநாட்டு அணிகளில் விளையாடுவேன். பிசிசிஐ ஒரு தனியார் நிறுவனம். நான் வேறு அணியில் விளையாடுவதை அதனால் தடுக்க முடியாது. ஐசிசி என் மீது தடை விதிக்கவில்லை என கூறியிருந்தார்.
 
இந்நிலையில், ஸ்ரீசாந்தின் கருத்திற்கு கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட ஒரு வீரர் எந்த நாட்டிற்காகவும் விளையாட ஐசிசியின் விதிமுறைகள் இடம் அளிக்கவில்லை. விதிமுறைகள் தெரியாமல் ஸ்ரீசாந்த் வெற்றுப் பேச்சுக்ளை பேசி வருகிறார் என  பிசிசிஐ-யின் பொறுப்பு செயலர் அமிதாப் சவுத்ரி கருத்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்