ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மிட்சல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் அபாரமாக விளையாடி, தலா 72 மற்றும் 75 ரன்கள் எடுத்தனர்.
இதனை அடுத்து, 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், இம்பேக்ட் பிளேயராக வந்த அஷுடோஷ் சர்மா அபாரமாக விளையாடி 62 ரன்கள் சேர்த்து போட்டியை லக்னோ அணியிடம் இருந்து தட்டிப் பறித்தார்.
இந்த போட்டியின் தொடக்கத்தில் டெல்லி அணி முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரையும் இழந்து தடுமாறியது. அதனால் போட்டி முழுவதும் லக்னோ கைவசம் இருந்தது. ஆனால் இம்பேக்ட் ப்ளேயராகக் களமிறங்கிய அஷூடோஷ் ஷர்மா வான வேடிக்கைக் காட்டி வெற்றியைத் தட்டிப்பறித்தார். இந்த போட்டியின் இறுதி ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்த நிலையில் மோஹித் ஷர்மா அஷூடோஷுக்கு ஒரு சிங்கிள் எடுத்துக் கொடுத்தார்.