இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட்... மழையால் தாமதமாகும் போட்டி!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (18:01 IST)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதற்கான அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. இது சமம்ந்தமாக அணி வீரர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இப்போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவரால் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவருக்கு பதிலாக பூம்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தற்போது தொடங்கி நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் இறங்கி 2 விக்கெட்களை இழந்து 53 ரன்களை சேர்த்துள்ளது. கோலி மற்றும் விஹாரி ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் உணவு இடைவேளைக்குப் பின் மழை பெய்து ஆடுகளம் ஈரப்பதத்தொடு காணப்படுவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்