இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டுவோம்: பென் ஸ்டோக்ஸ்

புதன், 29 ஜூன் 2022 (14:04 IST)
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிரடி காட்டுவோம் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உறுதி அளித்துள்ளார் 
 
கடந்த ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் நான்கு டெஸ்ட் போட்டிகள் நடந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 5வது போட்டி நிறுத்தப்பட்டது. 
இந்த 5வது போட்டி ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஏற்கனவே நடைபெற்ற நான்கு போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உலகின் தலைசிறந்த அணி நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வென்றது மிகுந்த மகிழ்ச்சி என்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் காட்டிய அதிரடியை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் காட்டுவோம் என்றும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்