இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலை தொடங்கியது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் மழையால் இரண்டு போட்டிகள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணி பேட்டிங் இறங்கிய நிலையில் 4.5 ஓவர்களில் 22 ரன்கள் சேர்த்திருந்த போது மழை குறுக்கிட்டததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.