சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நேபாள வீரர் சந்தீப் லமிச்சேனே நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் சந்தீப் லமிச்சேனே. நேபாள அணிக்காக பல்வேறு சர்வதேச தொடர்களில் விளையாடிய சந்தீப் 2018 – 2020ல் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.
2022ம் ஆண்டில் ஹோட்டல் அறையில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக சந்தீப் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த காத்மாண்டு நீதிமன்றம் சந்தீப்பிற்கு சிறை தண்டனை விதித்த நிலையில், கரீபியன் ப்ரீமியர் லீகில் விளையாடிக் கொண்டிருந்த சந்தீப் மீண்டும் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு கைது செய்யப்பட்டார்.
இந்த விசாரணை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில் தற்போது சந்தீப் லபுச்சேனே குற்றவாளி அல்ல என்று உறுதி செய்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் சந்தீப் லபுச்சேனே விடுதலையாவதற்கு முன்னரே உலக கோப்பை டி20 தொடருக்கான நேபாள அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றங்கள் செய்ய மே 25 வரை அவகாசம் உள்ளது. அதனால் சந்தீப் லபுச்சேனை உலக கோப்பை அணியில் நேபாள் கிரிக்கெட் வாரியம் விரைவில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.