ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

Prasanth Karthick

திங்கள், 17 பிப்ரவரி 2025 (12:20 IST)

சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளுக்காக துபாய் சென்றுள்ள இந்திய அணி பயிற்சி ஆட்டம் மேற்கொண்டபோது ரிஷப் பண்ட் காயம் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் நாளை மறுநாள் (பிப்.19) தொடங்கி நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் நிலையில் 20ம் தேதி வங்கதேச அணியுடன் இந்தியா மோத உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் துபாய் சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் காலில் தாக்கியதால் அவர் சுருண்டு விழுந்து அலறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடனடியாக அவர் மருத்துவ அறை அழைத்து செல்லப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

ALSO READ: வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

 

சில ஆண்டுகள் முன்னதாக கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் தற்போதுதான் மெல்ல குணமாகி வந்து பல போட்டிகளில் தனது ஃபார்மை நிரூபித்து வருகிறார். இந்த போட்டியிலுமே கே.எல்.ராகுல்தான் முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பார் என அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

 

இந்நிலையில் தற்போது ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளது அவர் ப்ளேயிங் 11ல் தேர்வாவதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்