துபாயில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் விராட் கோலி… என்ன காரணம்?

vinoth

செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (07:39 IST)
நாளைத் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இதற்காக அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் முகாமிட்டிருக்க, இந்தியா மட்டும் துபாயில் உள்ளது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது.

முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை இந்த தொடருக்குக் கூட அழைத்துச் செல்ல அனுமதி  மறுக்கப்பட்டுள்ளது. அதே போல வீரர்களுக்கு என்று தனி சமையல்காரர்கள் அழைத்து செல்வதையும் அனுமதிக்கவில்லை. இதனால் விராட் கோலி தற்போது துபாயில் ஹோட்டல் ஒன்றில் தனக்கென பிரத்யேகமாக உணவு எப்படி சமைக்கப்படவேண்டுமெனக் கூறி அதன் படி உணவை ஆன்லைனில் பெற்று உண்டு வருகிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்