கடந்த சில நாட்களாக மகளிர் பிரிமியர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் ஏற்கனவே பெங்களூரு அணி ஒரு போட்டியில் வென்ற நிலையில், நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
142 என்ற எளிய இலக்கை நோக்கி பெங்களூரு அணி பேட்டிங் செய்தபோது, கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபாரமாக விளையாடி 47 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். இதில் 14 பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடக்கம். அவருக்கு துணையாக டானி வாட் 42 ரன்கள் எடுத்தார்.
அதன் காரணமாக, பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.