மனைவி சாக்‌ஷிக்கு வித்தியாசமான பரிசளித்த தோனி !

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (18:23 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, திருமண நாளை முன்னிட்டு தனது மனைவி சாக்‌ஷிக்கு ஒரு காரை பரிசளித்துள்ளார்.

முன்னாள் கேப்டன் தோனி. இவர் 3 வகையான போட்டிகளிலும் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனை படைத்தவர்.

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்ற்றாலும் அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்ற்ய் விளையாடிவருகிறார்.
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஐபிஎல் 14 வது சீசன் ஒத்திவைக்கப்பட்டதால் தற்போது சென்னை அணி கேப்டன் தோனி ஓய்வு எடுத்து வருகிறார்.


இந்நிலையில் இன்று தங்களது 11 வது திருமண தினத்தை முன்னிட்டு தல தனது மனைவி சாக்‌ஷிக்கு ஒரு விண்டேஜ் காரை பரிசளித்துள்ளார்.  இதுகுறித்த புகைப்படத்தை பதிவிட்டு தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளா சாக்‌ஷி.

இதைப்பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்