தமிழகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிகளில் ஏடிஎம் இயந்திரத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதியில் இருந்து 19 ஆம் தேதிக்குள நூதனமான முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அமீர் மற்றும் வீரேந்தர் , நசீர்ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளையின்போது, தமிழகம் வந்து பைக் ஓட்டினால் ரூபாய் 1 லட்சம் தருவதாக அமீர் அர்ஷ் கூறியதாக வீரேந்தர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மேலும்ஏ.டி.எம்.-களில் பணம் கொள்ளையடித்து விட்டு தப்பி செல்ல பைக் ஓட்ட உதவியதாக வீரேந்தர் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், சென்னை ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் இயந்திரங்களை கொள்ளையடித்த கும்பலின் தலைவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கொள்ளை கும்பல் தலைவன் சௌகத் அலியை சென்னை அழைத்து வந்தனர். இவர் ஏற்கனவே மத்திரபிரதேசம், புதுச்சேரி, உத்தரபிரதேசத்தில் கைவரிசை காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது