இந்த ஐபிஎல் சீசனில் தோனி செம ஃபார்மில் உள்ளதாக அவர் சிறப்பாக விளையாடி வருவதாகவும் டு பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதின.டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் பந்துவீச முடிவு செய்ததால், சென்னை அணி முதலில் களமிறங்கியது.
வாட்சன் மற்றும் தோனி ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 211 ரன்கள் அடித்தது. தோனி 22 பந்தில் 51 ரன்கள் குவித்தார்.
இந்த ஐபிஎல் சீசனில் தோனி அபாரமாக விளையாடி வருகிறார். அவர் ஃபுல் ஃபார்மில் இருக்கும்போது அவருக்கு பந்து வீசுவதற்கு பவுலருக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் தோனியால் எந்தவொரு பந்து வீச்சாளரையும், கேப்டன்களையும் திணறடிக்க முடியும் என டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.