MI VS RCB: ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைய கடும் போட்டி...

Webdunia
செவ்வாய், 1 மே 2018 (12:48 IST)
நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இது 8 அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் 31 வது லீக் ஆட்டமாகும். 
 
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வி அடைந்துள்ளது. 
 
பெங்களூர் அணி இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. கடந்த போட்டியில் அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் மோசமாக இருந்தது. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் பெங்களூரு அணி உள்ளது. 
 
இரு அணிகளுக்கும் இன்னும் 7 ஆட்டங்களே எஞ்சி இருக்கிறது. அதில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். எனவே இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இன்று இரவு 8 மணிக்கு போட்டி துவங்கவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்