இந்த நிலையில் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி முக்கிய விக்கெட்டுக்களை விரைவில் இழந்தது. ஷா, முண்ரோ, ஸ்ரேயாஸ் ஐயர், மேக்ஸ்வெல் ஆகியோர் குறைந்த ரன்களில் அவுட் ஆனாலும், ஆர்.ஆர்.பேண்ட் அதிரடியாக விளையாடினார். இருப்பினும் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் சென்னை அணி முதலிடத்தை பிடித்தது.