ஏ எப்புட்றா..! சாம்பியன்ஸுக்கு வந்த சோதனை! – டிசியிடம் மரண அடி வாங்கிய குஜராத் டைட்டன்ஸ்!

Webdunia
புதன், 3 மே 2023 (08:22 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸிடம் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 16வது சீசனின் லீக் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. 10 அணிகள் விளையாடி வரும் நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணிக்கும் நேற்று போட்டி நடந்தது.

முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி அணியை “நீங்கெல்லாம் எங்களுக்கு ஒரு போட்டியா?” என்ற விதத்திலேயே குஜராத் அணி டீலிங் செய்தது. ஆரம்பமே ஓபனிங் பேட்ஸ்மேன்களான பில் சால்ட், வார்னர் விக்கெட்டுகளை குஜராத் டைட்டன்ஸ் தூக்க அடுத்தடுத்து களமிறங்கிய ப்ரியம், மனிஷ் பாண்டே, ரிலி ரோசோ என எல்லாரும் சொற்ப ரன்களில் விக்கெட் இழந்தார்கள்.

இருந்தாலும் ‘தோத்தாலும், ஜெயிச்சாலும் சண்ட செய்யணும்’ என்ற உயரிய நோக்கத்துடன் களமிறங்கிய ஆமன் கான் 51 ரன்களை குவித்து டெல்லி ஸ்கோரை உயர்த்தினார். இவ்வளவு போராடி 20 ஓவர்கள் முடிவில் 130 ரன்களே டெல்லி பெற்றது.

நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் 200 ரன்களையே அசால்ட்டாக டீல் செய்து வரும் நிலையில் 130 இலக்கு எல்லாம் அல்வா சாப்பிடுவது போல என்றுதான் எல்லாருமே நினைத்தார்கள். ஆனால் குஜராத் அணிக்கே அல்வா கொடுத்து சாப்பிட சொல்வது போல அமைந்தது டெல்லியின் ஃபீல்டிங்.



ஓபனிங் பேட்ஸ்மேன் வ்ரித்திமான் சாஹாவை முதல் ஓவரிலேயே தூக்கிய டெல்லி, சுப்மன் கில்லை போனால் போகிறதென்று ஒரு சிக்ஸ் மட்டும் அடிக்கவிட்டு விக்கெட்டை பிடித்தது. ஹர்திக் பாண்ட்யா மட்டும் அவுட் ஆகாமல் நின்று 59 ரன்கள் சேர்த்தார். அதற்கே அவர் 53 பந்துகளை செலவழிக்க வேண்டியதாயிற்று.

அடுத்தடுத்து களமிறங்கிய விஜய் ஷங்கர், டேவிட் மில்லர் என எல்லார் விக்கெட்டையும் அடித்து நொறுக்கி, இதெல்லாம் இரு டார்கெட்டா என கேட்டவர்களை, ‘முடிஞ்சா இந்த டார்கெட்டை தொடுங்க’ என்ற லெவலில் நெருக்கி பிடித்து கடைசியாக 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி.

டெல்லி அணி வந்தாலே எதிரணிக்கு 2 பாயிண்ட்கள் கிடைக்கும் என கிண்டலாக பேசப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனிடமே 2 பாயிண்டுகளை டெல்லி அணி பறித்து சென்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்