ஐபிஎல் போட்டியில் இந்த அணிதான் ஜெயிக்கும்! – ஆரூடம் சொல்லும் ப்ரெட் லீ!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (09:36 IST)
ஐபிஎல் டி20 போட்டிகள் அரபு அமீரகத்தில் நடக்க உள்ள நிலையில் அதில் எந்த அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட்லீ தனது எதிர்பார்ப்பை கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்புகளால் கடந்த மார்ச் மாதம் முதலாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமலே இருந்து வந்தது. இந்நிலையில் இந்தியாவில் நடத்த முடியாததால் ஐபிஎல் போட்டிகளை அரபு அமீரகத்தில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்கு இந்திய அரசும் அனுமதி அளித்துள்ள நிலையில் போட்டி ஏற்பாடுகள் தீவிரமடைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ப்ரெட்லீ ”அரபு அமீரகம் வெப்பம் மிகுந்த பகுதியாகும். எனவே கிரிக்கெட் மைதானத்தில் வீரர்கள் விளையாடும்போது நல்ல வெப்பம் இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களால் பந்தை சிறப்பாக வீச முடியும். ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வலிமையான வீரர்களை முன்பிருந்தே கொண்டுள்ளது. அரபு அமீரகத்தில் உள்ள ஆடுகளங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிச்சயம் சாதகமானதாக இருக்கும். எனவே அமீரகத்தில் நடக்கு இந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெறும் என்பது எனது எதிர்பார்ப்பு” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்