ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் பதஞ்சலிக்கு போகின்றதா? பரபரப்பு தகவல்

திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (13:04 IST)
ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் பதஞ்சலிக்கு போகின்றதா?
13வது ஐபிஎல் போட்டியின் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விவோ நிறுவனத்தை சமீபத்தில் பிசிசிஐ நீக்கியது என்பது தெரிந்ததே. இந்தியா சீனா நாடுகளுக்கு இடையே உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 13வது ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்ய பல முன்னணி நிறுவனங்கள் போட்டியில் உள்ளன என்பதும் குறிப்பாக ஆன்லைன் கல்வி செயலியான பைஜூஸ், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, கொக்கோகோலா, உட்பட பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதற்கிடையில் அமேசான் நிறுவனமும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது பதஞ்சலி நிறுவனமும் ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக ’தி எகனாமிக் டைம்ஸ்’ இதழுக்கு பேட்டியளித்த பதஞ்சலி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
 
தங்கள் நிறுவனத்தின் படைப்புகள் உலக அளவில் சென்று சேர வேண்டும் என்பதற்காக ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்ய விரும்புவதாக அவர் கூறியுள்ளார். மத்திய அரசுக்கு பாபா ராம்தேவ் மிகவும் நெருக்கமாக இருப்பதால் திமூன்றாவது ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்ய அவரது பதஞ்சலி நிறுவனத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்