பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

vinoth
புதன், 25 டிசம்பர் 2024 (13:32 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. நாளை மெல்போர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது.

இந்தபோட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது. ஏனென்றால் இரு அணிகளுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவேண்டுமென்றால் இந்த போட்டியை வென்றாகவேண்டும். இந்நிலையில் தற்போது ஆஸி அணி பாக்ஸிங் டே போட்டிக்கான ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளது.

ஆஸி அணியில் சாம் கோன்ஸ்டாஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டு மெக்ஸ்வீனி மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆஸி ஆடும் லெவன் அணி
உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நேதன் லயன். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்