இதுபோன்ற ஒரு தரம்தாழ்ந்த அணியை நான் பார்த்ததில்லை… மேத்யூஸ் ஆதங்கம்!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (10:46 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ்  பேட் செய்ய தாமதமாக வந்ததால் அவரை டைம்ட் அவுட் முறையில் விக்கெட்டுக்கு அப்பீல் செய்தனர் வங்கதேச வீரர்கள். அதை ஏற்ற நடுவர்கள் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக Timed Out முறையில் மேத்யூஸை அவுட் என அறிவித்தனர்.

இந்த சர்ச்சை விவகாரத்தில் தான் 2 நிமிடத்துக்குள்ளாகவே களத்துக்குள் வந்துவிட்டதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் மேத்யூஸ் கூறியுள்ளார். அதில் “என்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோல தரம்தாழ்ந்த ஒரு அணியை நான் பார்த்ததில்லை. உடைந்த ஹெல்மெட்டோடு ஒரு வீரர் எப்படி விளையாடுவார் என்ற அறிவுகூட இல்லாமல் அவர்கள் நடந்துகொண்டார்கள்

எதிரணி மற்றும் விதிகளை மதிக்காத ஒரு அணியாக வங்கதேசம் நடந்துகொண்டுள்ளது. அதனால் அவர்களோடு ஏன் நாங்கள் கைகுலுக்க வேண்டும். ” எனக் கூறியுள்ளார். போட்டி முடிந்ததும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணி வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்